இஸ்ரேலுக்கு இந்தியா உதவி; நன்றியை பதிவு செய்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு
1 min read

இஸ்ரேலுக்கு இந்தியா உதவி; நன்றியை பதிவு செய்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு

ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகள் உட்பட 5 டன்கள் அளவுள்ள முக்கிய மருத்துவ உபகரணங்ளை சப்ளை செய்த இந்தியாவிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது நன்றியை பதிவு செய்துள்ளார்.

ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்து கொரானா மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் தற்போது பல்வேறு உலக நாடுகள் இந்தியாவிடம் இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்தியா அனுப்பிய மெடிக்கல் சப்ளை கடந்த செவ்வாய் அன்று இஸ்ரேலை அடைந்தது.இஸ்ரேலில் இதுவரை கிட்டத்தட்ட 10000 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.86 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 3 அன்று இந்தியாவிடம் இஸ்ரேல் மருத்துவ சப்ளைகளை வேண்டியிருந்தது.
உள்நாட்டு தேவைகளுக்காக இந்த மருந்துகளின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரானா தாக்கம் தொடங்கியது முதல் இன்று வரை கொரானா குறித்து இரு நாட்டு தலைவர்கள் தொடர்ந்து பேசி விவாதித்து வந்துள்ளார்கள்.