
இஸ்ரேலிய நிறுவனமான எல்பிட் இந்திய விமானப்படைக்கு சுமார் 103மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மின்னனு கருவிகள் வழங்கும் ஒப்பந்தத்தை வென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூன்று வருடங்களில் செயல்படுத்தி முடிக்கப்படும் எனவும், நீண்ட கால பராமரிப்பு பணிகளும் இதில் அடங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் எட்கர் மேய்மன் கூறுகையில் இந்த ஒப்பந்தத்தின் படி இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களில் மின்னனு அமைப்புகளும் தற்காப்பு அமைப்புகளும் பொருத்தப்படும் என தெரிவித்தார்.