நேற்று காஷ்மீரில் CRPF வீரர் மீது நடத்திய தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு !!

  • Tamil Defense
  • April 8, 2020
  • Comments Off on நேற்று காஷ்மீரில் CRPF வீரர் மீது நடத்திய தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு !!

நேற்று ஜம்மு காஷ்மீரின் அனந்த்னாக் மாவட்டத்தில் பிஜ்பெஹாரா எனும் பகுதியில் ரோந்து சென்ற மத்திய ரிசர்வ் காவல் படை குழு மீது தாக்குதல் நடைபெற்றது இதில் ஒரு வீரர் வீரமரணமடைந்தார்.

சரியாக மாலை 5.50 மணிக்கு ரோந்து குழுவினர் மீது ஒரு பயங்கரவாதி கையெறி குண்டை வீசினான் ஆனால் அது வெடிக்கவில்லை, இதன் காரணமாக அவர்கள் மீது அவன் துப்பாக்கி சூடு நடத்தியதில் தலைமை காவலர் ஷிவ் லால் நீதம் உயிரிழந்தார்.

மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் கூறும்போது, முதலில் வீசிய கையெறி குண்டு சரியாக வெடிக்கவில்லை ஆனால் அதில் இருந்து வந்த சிதைவுகள் அவரது உடலை தாக்கியது. பின்னர் நடத்திய துப்பாக்கி சூடு அவரது உயிரை பறித்தது.

இதனையடுத்து அமாக் ஊடகத்தில் ஐ.எஸ் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் இத்தாக்குதலுக்கு அவய்கள் பொறுப்பேற்று கொள்வதாக தெரிவித்துள்ளனர்.