இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ் பயங்கரவாதிகள் 37பேர் ஆஃப்கன் உளவுத்துறையால் கைது !!

  • Tamil Defense
  • April 6, 2020
  • Comments Off on இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ் பயங்கரவாதிகள் 37பேர் ஆஃப்கன் உளவுத்துறையால் கைது !!

சமீபத்தில் காபூலில் சீக்கிய குருத்வாராவை ஐ.எஸ் இயக்கம் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவனும் ஐ.எஸ் கொராசான் தலைவனுமான அஸ்லாம் ஃபருக்கி சமீபத்தில் அவனது 36 சகாக்களுடன் ஆஃப்கன் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டான். இவர்களில் குழந்தைகளும் பெண்களும் அடக்கம்.

இவர்களில் அஸ்லாம் ஃபருக்கி உட்பட பலர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவார். தற்போது ஃபருக்கி அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அஸ்லாம் ஃபருக்கி என்பவன் லஷ்கர் இ தய்பா இயக்கத்தின் முன்னாள் தளபதிகளில் ஒருவன், பாக். ஐ.எஸ்.ஐ அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளான்.

இவனை அப்துல்லாஹ் ஒராக்ஸாய் எனவும் அழைக்கிறார்கள். பல்வேறு பயங்கரவாத இயக்கங்களில் இருந்து பிரிந்த சுமார் 4000 பயங்கரவாதிகளை கொண்ட இந்திய துணைக்கண்டத்திற்கு பொறுப்பான ஐ.எஸ் பிரிவுக்கு தலைவனாக உள்ளான்.

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ யின் உத்தரவுபடி ஐ.எஸ் , லஷ்கர், ஜெய்ஷ் போன்ற அமைப்புகள் ஆஃப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் பல ற இந்திய நலன் சார்ந்த பகுதிஙளை தாக்க திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.