சமீபத்தில் ஆஃப்கன் உளவுத்துறை குருத்வாரா த்க்குதலின் சூத்திரதாரி யான் அஸ்லாம் ஃபருக்கி என்பவனை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆஃப்கன் தேசிய பாதுகாப்பு சிறப்பு படைகளின் தலைவர் அஹமது கூறுகையில்,
தனது ஏழு வருட பணிக்காலத்தில் அஸ்லாம் ஃபருக்கியை கைது செய்யும் நடவடிக்கை தான் மிக கடினமானதாக இருந்தது எனவும் ஆறு நாட்களுக்கு தொடர்ந்து இந்த நடவடிக்கை நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் கூறும்போது முதலில் ஷாஹ் வாலி என்ற வெடிமருந்து மற்றும் ஆயுத வியாபாரியை கைது செய்ய தான் முயற்சி செய்தோம் என்றார்.
பாகிஸ்தான் உதவியுடன் சமீப காலங்களில் ஐ.எஸ் இயக்கம் மிகவும் அதிகமாக செயல்பட தொடங்கியுள்ளது. சமீபத்தில் அப்துல் அலி மஸாரி எனும் பயங்கரவாதியின் நினைவு நாளன்று காபூலில் நடத்திய தாக்குதலில்32 பேர் உயிர் இழந்தனர் பின்னர் சீக்கிய குருத்வாராவில் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிர் இழந்தனர்.
அஸ்லாம் ஃபருக்கி லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ மொஹம்மது, ஹக்கானி குழு ஆகிய பயங்கரவாத இயக்கங்களுடனும் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளான்.
ஃபருக்கி உடன் காரி ஸாஹேத் என்ற முக்கிய ஐ.எஸ் தளபதியும் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஃபருக்கி உடன் கைது செய்யப்பட்ட சில பயங்கரவாதிகளின் பெயர்களாவன,
1) தன்வீர் இஸ்லாம் – வங்காளதேசம்
2) மஸூதுல்லாஹ் – பாகிஸ்தான்
3) ரேஹான் – பாகிஸ்தான்.
4) ஸாஹித் கான் மொஹம்மது – பாகிஸ்தான்.
5) குல் மொஹம்மது – பாகிஸ்தான்.
6) சல்மான் – கராச்சி , பாகிஸ்தான்.
7) அப்துல்வாலி – குவெட்டா, பாகிஸ்தான்.
8) அஹமது – கராச்சி, பாகிஸ்தான்.
9) ஸயாஃப் – ஆஃப்கானிஸ்தான்.
10) அலி மொஹம்மது – இஸ்லாமாபாத், பாகிஸ்தான்.
11) ஆதில் – காஷ்மீர், இந்தியா.
12) நோமன் – கராச்சி, பாகிஸ்தான்.
13) அப்துல்லா – காஷ்மீர்,இந்தியா.
14) மொஹம்மது அஸ்லாம் – குவெட்டா, பாகிஸ்தான்.
15) மகூல் – குவெட்டா, பாகிஸ்தான்.
16) அசாதுல்லா – ஆஃப்கானிஸ்தான்.