ஐ.எஸ் வைத்துள்ள குறியில் தில்லி

சில நாட்கள் முன்பு இதைப்பற்றி ஒரு பதிவிட்டிருந்தோம் தற்போது மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி கொரோனா தொற்று நாட்டை முடக்கி போட்டுள்ள இச்சூழலில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இதனை ஒரு வாயப்பாக கருதி தனது திட்டங்களை செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது.

தில்லி முழுவதும் முடக்கப்பட்டு காவலர்கள் நகரமெங்கும் ஊரடங்கை அமல்படுத்த நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளனர்.

அதாவது கத்திகுத்து, துப்பாக்கி சூடு , வாகனத்தை வைத்து இடித்து கொல்வது என சில திட்டங்களை அவர்கள் வைத்துள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக தில்லி காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது.