Breaking News

சீன கடற்படைக்கு இந்திய பெருங்கடலில் சவால் விடுக்கும் இந்திய இஸ்ரேல் கூட்டு தயாரிப்பு ஏவுகணை !!

  • Tamil Defense
  • April 1, 2020
  • Comments Off on சீன கடற்படைக்கு இந்திய பெருங்கடலில் சவால் விடுக்கும் இந்திய இஸ்ரேல் கூட்டு தயாரிப்பு ஏவுகணை !!

சீன அரசு தொலைக்காட்சியில் ராணுவம் சார்ந்த ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது அதில் பங்கேற்ற சீன ராணுவ வல்லுநர் ஒருவர் கூறும்போது இந்திய இஸ்ரேல் கூட்டு தயாரிப்பு ஏவுகணையான “பராக்8” இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீன கடற்படைக்கு பெருத்த சவாலாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு லெபனான் போரின் போது இஸ்ரேலிய கடற்படையின் கார்வெட் ரக கப்பலான ஐ.என்.எஸ் ஹனிட் லெபனான் கடலோரம் ரோந்து சென்ற போது C – 802 ரக க்ருஸ் ஏவுகணையால் தாக்கப்பட்டது. இந்த ஏவுகணை ஈரானுக்கு சீனாவால் விற்கப்பட்டு பின்னர் ஈரான் அரசு லெபனின் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கியது என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் 4 இஸ்ரேலிய கடற்படை வீரர்கள் கொல்லபட்டனர், கப்பலும் கணிசமான அளவுக்கு சேதமடைந்தது. இதற்கு பின்னான காலகட்டத்தில் ஒரு நவீன ஏவுகணைக்கான தேவையில் இருந்த இஸ்ரேல் மற்றும் இந்தியா கூட்டு சேர்ந்து பராக்8 ஏவுகணை தயாரிப்பில் இறங்கின.
பாகிஸ்தானும் இத்தகைய ஏவுகணைகளை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் DRDO மற்றும் இஸ்ரேலின் IAI ஆகியவை இணைந்து கப்பல் எதிர்ப்பு க்ருஸ் ஏவுகணைகளை அழிக்கும் (LRSAM – Long Range Surface to Air Missile) தயாரிப்பில் இறங்கின.

இதன் சிறப்பம்சங்கள்:

  1. நெடுந்தூர தாக்குதல் திறன்
  2. இருவழி தகவல் அமைப்பு
  3. உயர்திறன் ரேடார்
  4. 360 டிகிரி கண்காணிப்பு
  5. செங்குத்தாக மேலெழுந்து செல்லும் திறன்
  6. ஒரே நேரத்தில் பல இலக்குகளை கண்காணிக்கும் திறன்

ராணுவ வல்லுநர்கள் கருத்துப்படி இந்த ஏவுகணை மிக நவீன ரேடார் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது, மேலும் கடினமான சூழலில் கூட உயர்தரமான, துல்லியமான தகவல்களை பெற்று கொள்ளவும் ரேடாரில் சிக்க கடினமான இலக்குகளை கூட அடையாளம் கண்டுபிடிக்க வல்லது ஆகும்.

இது இரவு பகல் , எந்த காலநிலையானாலும் நன்கு செயல்படும் திறன் கொண்டது மேலும் குறைந்த நேரத்தில் இலக்குகளை அடையாளம் கண்டுபிடித்து தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது.