டியு160 தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானம் ஆர்வம் காட்டும் இந்திய விமானப்படை !!

  • Tamil Defense
  • April 26, 2020
  • Comments Off on டியு160 தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானம் ஆர்வம் காட்டும் இந்திய விமானப்படை !!

சீனா தனது ஹெச்6 ரக தொலைதூர குண்டுவீச்சு விமானங்ஙளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. ஊதன் காரணமாக இந்திய விமானப்படை ரஷ்ய தயாரிப்பான டியு160 தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானங்கள் மீது ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த டியு160 விமானம் “வெள்ளை அன்னப்பறவை” எனும் புனைப்பெயரை கொண்ட மிக அழகான வடிவமைப்பு கொண்டு மிகப்பெரிய சக்தி வாய்ந்த வகமானம் ஆகும்.

இது வேகத்தில் அமெரிக்காவின் “எக்ஸ்.பி70 – வால்க்கைரி” விமானத்திற்கு அடுத்து அதிக வேகமாக செல்லும் ஆற்றல் கொண்டது. தற்போதைய உலகில் இது தான் உலகிலேயே மிகப்பெரிய மாறுபடும் இறக்கைகள் கொண்ட சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானம் ஆகும்.

இந்த விமானத்தில் 2 விமானிகள், 1 குண்டுவீச்சு அதிகாரி மற்றும் 1 தற்காப்பு அமைப்பு அதிகாரி என நால்வர் பணியாற்றுவர்.ஆபத்தான நிலையில் தப்பிக்க நான்கு கே36எல்எம் எஜக்ஷன் சீட் உண்டு.

இந்த விமானமானது நான்கு “சமாரா என்.கே32” டர்போ ஃபேன் என்ஜின்களை கொண்டது. இவற்றின் அதிக சக்தி காரணமாக இந்த விமானம் மாக்2.05 வேகம் வரை செல்லும் (அதாவது மணிக்கு 2531 கிமீ வேகம்).இது ஆயுதங்கள் இன்றி எரிபொருள் நிரப்பாமல் சுமார் 12,000கிமீ தொலைவுக்கு பறக்கும் ஆற்றல் கொண்டது. அதே நேரத்தில் ஆயுதங்களின் எடை மற்றும் பறக்கும் வேகத்தை பொறுத்து இந்த இயக்க வரம்பு மாறுபடும். தேவைப்பட்டால் நடுவானில் எரிபொருள் நிரப்பி கொள்ளவும் முடியும்.

இந்த விமானத்தில் இரண்டு உட்பகுதி ஆயுத கிட்டங்கிகள் உள்ளன, இவற்றில் சுமார் 45ஆயிரம் கிலோ அளவிலான குண்டுகளை கொண்டு செல்ல முடியும். இந்த கிட்டங்கிகளில் சாதாரண மற்றும் லேசர் வழிகாட்டி குண்டுகள் மற்றும் ஏவுகணைகளையும் கொண்டு செல்ல முடியும்.

இதில் உள்ள இரு ரோட்டரி லாஞ்சர்களில் இருந்து 6 ரடூகா கே.ஹெச் 55எஸ்.எம்/101/102/555 ரக க்ருஸ் ஏவுகணைகள் அல்லது 12 “ஏ.எஸ்16” இடைதூர அணு ஆயுத ஏவுகணைகளையும் சுமக்க முடியும். மேலும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளையும், பல்வேறு வகையான ஆயுதங்களையும் சுமக்கும் என கூறப்படுகிறது.

இது அமெரிக்காவின் பி1பி லான்ஸர் விமானத்தை விட அளவில் பெரியதாகவும், அதிக வேகமாக செல்லக்கூடியதாகவும், அதிக ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடியதாகவும் நவீனத்துவம் கொண்டதாகவும் உள்ளது.

சீனா மட்டும் அல்ல அமெரிக்காவையும் கருத்தில் கொண்டு இதனை பெறுவது நல்லது காரணம் இந்தியாவிற்கு தெற்கே 1200கிமீ தொலைவில் அமெரிக்காவின் டியகோ கார்ஸியா தளம் உள்ளது இங்கு ஆசியாவில் பிரச்சினை நடக்கும் போதெல்லாம் அமெரிக்கா தனது குண்டுவீச்சு விமானங்களை அனுப்புவது வழக்கம், போர்களில் கூட இத்தளம் முக்கிய பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே எதிர்காலத்தில் இந்திய பெருங்கடல் பரப்பை கட்டுக்குள் வைக்க இந்த விமானம் நமக்கு பேருதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.