மின்னனு போர்முறை என்பது மின்னனு அமைப்பகளை நமக்கு சாதகமாகவும் எதிரிகளுக்கு பாதகமாகவும் பயன்படுத்தும் போர்முறையாகும்.
அதாவது எதிரிகளின் ரேடார்கள், தொலைதொடர்பு கருவிகள் ஆகியவற்றை ஜாம்மர்கள் மூலம் முடக்கி நமது மின்னனு சாதனங்கள் சிறப்பாக வேலை செய்வதை உறுதி செய்ய பயன்படுத்தும் முறையாகும்.
கண்ணுக்கு தெரியாத இந்த போர்முறை தான் இன்றைய நவீன போர்களில் வெற்றி தோல்வியில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த மின்னனு போர்முறையில் உளவு, கண்காணிப்பு, தொலைதொடர்பு முடக்கம், ஒட்டுகேட்பது என அனைத்தும் அடங்கும்.மேலும் இன்றைய காலத்தில் போர்விமானங்கள், கபபல்கள், ஏவுகணைகள், குண்டுகள், டாங்கிகள் என அனைத்து தளவாடங்களும் மின்னனு கருவிகளை உள்ளடக்கியே செயல்படுகின்றன.
மின்னனு சாதனங்களின் தரம், நம்பகத்தன்மை மிகவும் முக்கியமானவையாகும் ஆகவே ராணுவம் இவை முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கபட்டவை ஆக இருக்க வேண்டும் என விரும்புகிறது.
இதன் ஒரு பகுதியாக கடந்த 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் தரைப்படையின் சிக்னல் கோர் ஆகியவை இணைந்து சம்யுக்தா எனும் ஜாம்மர் அமைப்பை உருவாக்கின.
இந்த அமைப்பு மிக பரந்த அளவில் செயல்பட்டு தொலைதொடர்பு அலைவரிசைகள், எலக்ட்ரோமேக்னடிக் ஸபெக்டரம் ஆகியவற்றை முடக்க கூடியது. மேலும் இந்த அமைப்பு மின்னனு உளவு, தொலைதொடர்பு உளவு போன்ற பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது ஆகும்.
ஆனால் இந்த சம்யுக்தாவின் இயக்க வரம்பு குறைவானதாகும் அதாவது 150×70சதுர கிமீ மட்டுமே ஆகும்.
இதன் பின்னர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஹிம்ஷக்தி எனும் ஒருங்கிணைந்த மின்னனு போரியல் அமைப்பை உருவாக்கியது. இந்த ஹிம்ஷக்தி அமைப்பு களமுன்னனியில் சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் சக்தியை அதிகரிக்கும் வகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாகனங்களை கொண்டிருக்கும். இந்த அமைப்பின் இயக்க வரம்பு சுமார் 10,000 சதுர கிமீ ஆகும்.
இந்திய ராணுவம் இந்த அமைப்பை ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தொடர்பை முடக்க கண்காணிக்க பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இந்த அமைப்பை கொண்டு சாட்டிலைட் ஃபோன்கள், ரேடியோ ரிசீவர்கள் ஆகியவற்றை முடக்கி உள்ளனர் மேலும் தேவைப்பட்டால் மொபைல்களையும் முடக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.
மேலும் போரில் எதிரி நிலைகளை உடைத்து ஊடுருவும் டாங்கி படைகளுக்கெனவும் இந்த அமைப்பு உதவும், தொலைதொடர்பு , தகவல் பரிமாற்றம், கண்காணிப்பு மற்றும் உளவு ஆகியவற்றில் உதவும்.
மேலும் இந்த அமைப்பு முலம் எதிரிகளின் பிரங்கி தாக்குதல் நிலைகளில் தகவல் தொடர்பை முடக்க முடியும் இதனால் இலக்குகள் குறித்த தகவல் இன்றி நமது நிலைகளை அவர்களால் தாக்க முடியாது.
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்:
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல்களின் போது நமது பாரா சிறப்பு படை வீரர்கள் சென்ற உலங்கு வானூர்திகள் சிக்காமல் இருக்கு நமது தரைப்படை கனரக மின்னனு போர் அமைப்புகளை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவத்தின் டிபிஎஸ்-77 ரேடார்களை முடக்கி அவர்களது ஒருங்கிணைந்த அமைப்பை ஹேக் செய்தது. இதனால் பல மணிநேரம் கழித்து தான் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இத தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.