எல்லை கட்டுபாட்டு கோடருகே இந்தியா துல்லிய தாக்குதல் – ராஜ்நாத் சிங்!!

  • Tamil Defense
  • April 20, 2020
  • Comments Off on எல்லை கட்டுபாட்டு கோடருகே இந்தியா துல்லிய தாக்குதல் – ராஜ்நாத் சிங்!!

காஷ்மீர் எல்லையோரம் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவும் முகாம்களை இந்திய ராணுவம் பிரங்கிகள் மூலம் துல்லிய தாக்குதல் நடத்தி தாக்கி வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவம் தயார்நிலையில் உள்ளதாகவும், துல்லியமான உளவு தகவல்களின் அடிப்படையில் கடந்த இரண்டு வாரங்களாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது எனவும் கூறினார்.

கொரோனா தொற்று உலகை ஆட்டி படைத்து வரும் நிலையில் பாகிஸ்தான் இதனை வாய்ப்பாக கருதி எல்லையில் அத்துமீறி வருககறது.

பயங்கரவாத அமைப்புகளை தூண்டி விட்டு மிக கடுமையான அளவில் பயங்கரவாத சம்பங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.