Breaking News

இந்திய கடற்படையின் ரேவதி மத்திய கட்டுபாட்டு ரேடார் !!

  • Tamil Defense
  • April 27, 2020
  • Comments Off on இந்திய கடற்படையின் ரேவதி மத்திய கட்டுபாட்டு ரேடார் !!

இந்த ரேவதி மத்திய கட்டுபாட்டு ரேடார் இந்திய கடற்படையின் ப்ராஜெக்ட்28 கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ப்ராஜெக்ட்28 கப்பல்கள் கமொர்ட்டா ரக நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை கப்பல்களாகும்.

இந்த வகை கப்பல்களில் ஐ.என்.எஸ் கமொர்ட்டா, ஐ.என்.எஸ் கட்மாட், ஐ.என்.எஸ் கில்டான் மற்றும் ஐ.என்.எஸ் கவராட்டி என நான்கு கப்பல்கள் அடங்கும்.

இந்த ரேவதி ரேடார் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு பிரிவான மின்னனு மற்றும் ரேடார் மேம்பாட்டு அமைப்பினால் வடிவமைக்கப்பட்டு பெல், லார்ஸன் அன்ட் டுப்ரோ, ஏசியா மைக்ரோவேவ் மற்றும் என்டெக் ஆகிய நிறுவனங்களால் கூட்டாக தயாரிக்கப்பட்டாலும் இதில் பிரதானமான பங்கு பெல் நிறுவனத்துடையது ஆகும்.

இது ஒர் “இடைதூர அதி உயர்திறன் கொண்ட முப்பரிமாண கண்காணிப்பு ரேடார்” ஆகும்.

இந்த ரேடார் ஒரு ப்ளேனார் அர்ரே ஆன்டெனா மூலமாக ஒரு நேரத்தில் பலமுனைகளில் மல்டி பீம் கவரேஜ் அளிக்க கூடிய திறன் கொண்டது ஆகும். மேலும் இதனால் ஒரே நேரத்தில் 150 இலக்குகளை ஸ்கேன் செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.