
இந்திய கடற்படை தனது காவலர்படையில் பெண் அதிகாரிகளை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது.
தற்போது கடற்படை அதிகாரிகளிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாகவும்,
தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் ஐ.என்.எஸ் மின்டோவியில் உள்ள ப்ரோவோஸ்ட் பள்ளியில் பயிற்சிக்கு பின்னர் கடற்படையின் காவல் பிரிவில் இணைக்கப்படுவர்.
இந்திய கடற்படை பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர சேவைக்கான வாய்ப்பினை வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய தரைப்படையும் தனது காவலர் படையில் 100 பெண் வீரர்களை இணைக்க பயிற்றுவித்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.