கல்ப் நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தனது மூன்று மிகப் பெரிய கப்பல்களை கடற்படை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐஎன்எஸ் ஜலஷ்வா உடன் இரு டேங்க் தரையிறக்கு கப்பல்கள் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வெகுசில நாட்களுக்குள் இந்த கப்பல்கள் செல்லவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஜலஷ்வா மட்டுமே 850 முதல் 1000 பேர்களை மீட்டு கொண்டு வரும் திறனுடையது.கும்பிர் ரக இரு கப்பல்களும் அதை விட சிறியன என்றாலும் குறிப்பிடத்தக்க அளவு மக்களை மீட்டு வர வல்லது.700 மக்கள் வரை அவைகளால் மீட்க முடியும்.