
திருச்சிராப்பள்ளி மாநகரில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் கடற்படை ஆயுத ஆய்வகத்தில் பணியாற்றும் வீரர்கள் அனைவரும் தங்களது சம்பளத்தில் தங்களால் இயன்ற அளவுக்கு நிவாரண பொருட்களை வாங்கி தினக்கூலி மற்றும் பிறமாநில தொழிலாளர்களுக்கு அவற்றை வழங்க முடிவு செய்து நிவாரண பொருட்களை திருவெறும்பூர் தாசில்தார் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்துடன் இணைந்து திருச்சி காவல்துறையினருக்கு 500 சுய பாதுகாப்பு முகமூடிகளை வழங்க உள்ளனர்.