COVID19  துறைமுகங்களுக்கு செல்வதை தவிர்க்க இந்திய கடற்படை கப்பல்கள் தவிர்க்குமாறு உத்தரவு !!
1 min read

COVID19 துறைமுகங்களுக்கு செல்வதை தவிர்க்க இந்திய கடற்படை கப்பல்கள் தவிர்க்குமாறு உத்தரவு !!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அபாய கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இந்திய கடற்படை தலைமையகம் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அனுப்பியுள்ள தனது கப்பல்களை வெளிநாட்டு துறைமுகங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக கடலில் உள்ள போர்க்கப்பல்கள் அருகில் உள்ள நாடுகளின் துறைமுகங்களுக்கு சென்று தேவையான எரிபொருள், உணவு ஆகியவற்றை நிரப்பி கொள்ளும்.

ஆனால் தற்போது கொரோனா தொற்று அபாயம் உள்ளதால் இந்திய கடற்படை இதனை தவிர்க்க உத்தரவு பிறப்பித்துள்ளது மாறாக நமது டேங்கர் கப்பல்களை அனுப்பி தேவையான எரிபொருள் மற்றும் உணவு பண்டங்களை வழங்க முடிவு செய்துள்ளது.

இதன்படி ஈரான் பிரச்சினைக்கு பின்னர், சமீபத்தில் ஒமன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ் டார்காஷ் கப்பலுக்கு இம்முறையில் சப்ளை பொருட்கள் அனுப்பப்பட்டன.

இதுபற்றி கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில் “இந்த முறையில் கப்பல்களுக்கான சப்ளை பொருட்கள் அனுப்புவது கூடுதல் செலவு மற்றும் கடினமான காரியமாகும் ஆனால் தற்போது நிலவும் சூழலை பார்க்கும் போது இதை தவிர வேறு வழியில்லை காரணம் கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டால் கண்காணிப்புக்கு கப்பல்களை அனுப்ப முடியாத சூழல் ஏற்படும் இதனால் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு சிக்கல் ஏற்படும் என்றார்.

தற்போது சுமார் 10முன்னனி போர்க்கப்பல்கள் கடலில் பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு சமமான எண்ணிக்கையில் நடுத்தர கப்பல்கள் மற்றும் பல ரோந்து படகுகள் நமது கடலோர பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. தொலைதூரத்தில் இருந்து நாடு திரும்பும் கப்பல்களில் உள்ள வீரர்கள் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அணுசக்தியால் இயஙக அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் ராட்சத விமானந்தாங்கி கப்பல்களில் ஒன்றான யு.எஸ்.எஸ். தியோடர் ருஸ்வெல்ட் கப்பலில் பணியாற்றிய 5000வீரர்களில் 200பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்ட்ட நிலையில் அக்கப்பல் முற்றிலும் இயங்காமல் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.