சீன ராணுவத்தால் கடத்தப்பட்ட இளைஞர் இந்திய ராணுவத்தால் மீட்கப்பட்டார் !!

  • Tamil Defense
  • April 7, 2020
  • Comments Off on சீன ராணுவத்தால் கடத்தப்பட்ட இளைஞர் இந்திய ராணுவத்தால் மீட்கப்பட்டார் !!

சில நாட்களுக்கு முன்னர் அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த 21வயது நிரம்பிய இளைஞரான டோக்லே சிங்காம் என்பவரை சீன ராணுவம் கடத்தி சென்றது.

இதனை அடுத்து இந்திய ராணுவம் உடனடியாக நடவடிக்கை எடுத்த நிலையில் சீன ராணுவத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி அந்த இளைஞரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

தற்போது கொரோனா அபாயம் காரணமாக ராணுவத்தால் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பிரச்சினை இல்லை எனில் குடும்பத்தினரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார்.