
நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சுமந்து செல்லும் வகையிலான இலகுரக லேசர் குறிவைத்தல் கருவியை தயாரித்துள்ளது.
இந்த கருவி மூலமாக
லேசர் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் உதவி பெறும்.
இது எந்த கால சூழலிலும் இயங்கும் வகையிலும் வீரர்களால் எளிதில் போர்முனைக்கு கொண்டு செல்லப்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இது நகரும் மற்றும் நகராத இலக்குகளை கண்டுபிடிக்க, கண்காணிக்க, இலக்கை குறிவைக்க இரவிலும் பகலிலும் உதவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் இருந்து வெளிப்படும் லேசர் கதிர்கள் இலக்கை குண்டுகளுக்கு ஏவுகணைகளுக்கு காண்பித்து கொடுக்கும். இதன் மூலமாக ஏவுகணைகள் மற்றும் குண்டுகளுக்கு இலக்கு அடையாளம் காட்டப்ட்டு துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். இந்த முறை லேசிங் என அழைக்கப்படுகிறது
இத்தகைய காட்சியை பேட்டல் லாஸ் ஏஞ்சலஸ் எனும் ஹாலிவுட் படத்தில் காணலாம்.
உங்கள் புரிதலுக்காக அதன் யூடியூப் லிங்கை இத்துடன் இணைத்துள்ளோம்
https://youtu.be/t6nqp5MdMp0