சரஸ் மார்க் 2 விமானத்தை தயாரிக்க உள்ள இந்தியா !!

  • Tamil Defense
  • April 12, 2020
  • Comments Off on சரஸ் மார்க் 2 விமானத்தை தயாரிக்க உள்ள இந்தியா !!

உள்நாட்டிலேயே ஒரு சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து விமானத்தை தயாரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கனவினால் உருவாகியது தான் சரஸ் விமானம்.

தற்போது HAL மற்றும் NAL நிறுவனங்கள் சரஸ் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமான சரஸ் மார்க்2 விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த விமானத்தில் ஏற்கனவே உள்ள PUSHER PROPELLERஐ களைந்து விட்டு புதிய TRACTOR MOUNTED PROPELLERஐ பொருத்த திட்டமிட்டுள்ளனர்.

மத்திய அரசின் “உடான்” திட்டம் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளை விமான போக்குவரத்து மூலமாக இணைக்க உள்ளது. ஆகவே இந்த திட்டத்தின் சரஸ் மார்க்2 விமானம் போட்டியிடும்.
விமானப்படையிலும் பயன்படுத்தப்படும்.

மேலும் முந்தைய வடிவத்தில் 14 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் ஆனால் இந்த மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் 19பேர் பயணிக்க முடியும்.

இந்த மார்க்2 வடிவத்தில் அதிக வேகம், எரிபொருள் சிக்கனம், குறைந்த அளவிலான ஒலி என பல சிறப்பம்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.