
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் தலைவர் இம்மானுவேல் மாக்ரோன் அவர்கள் இருவரும் கொரானா பரவுதல் தடுப்பு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனர்.
இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மனித இனத்தை முன்வைத்த உலகமயமாதல் இதனால் சாத்தியமாக வாய்ப்புள்ளதாகவும் நவீன வரலாற்றில் இது திருப்புமு னயாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி பிரான்ஸ் தலைவரிடம் பேசியுள்ளார்.
இந்த பிரச்சனை குறித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகள் குறித்து இரு தலைவர்களும் உரையாடியுள்ளனர்.மேலும் உலகம் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கொரானா பாதிப்பு தடுப்பு போன்ற முக்கிய தகவல்களை இரு நாடுகளின் வல்லுநர்களும் பகிர்ந்து கொள்வது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன.