இராணுவ வீரர்களுக்காக குறைந்த விலை சானிடைசரை தயார் செய்து அசத்தும் மேஜர் மற்றும் அவரது மனைவி

  • Tamil Defense
  • April 18, 2020
  • Comments Off on இராணுவ வீரர்களுக்காக குறைந்த விலை சானிடைசரை தயார் செய்து அசத்தும் மேஜர் மற்றும் அவரது மனைவி

சுகாதாரப் பாதுகாப்பில் WHO காட்டிய வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சானிடிசர் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றுவரை மொத்தம் 809 லிட்டர் சானிடிசர் இவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.

கொரானா போரில் பங்கேற்றுள்ள வீரர்களின் பாதுகாப்பிற்காக இந்த கற்றாழை அடிப்படையிலான குறைந்த விலை சானிடைசரை 9 கார்ப்ஸ் படைப்பிரிவில் பணியாற்றும் மேஜர் மற்றும் அவரது மனைவி தயாரித்துள்ளனர்.

மேஜர் ரோகித் ராதே அவர்கள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிகல் என்ஜினியரிங் படைப்பிரிவில் மேஜராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது
ஹிமாச்சலில் உள்ள 9 கார்ப்ஸ் படைப்பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.அவரது மனைவி ஸ்ருஷ்டி வேலூரில் உள்ள விஐடியில் பிஎச்டி படித்து வருகிறார்.

ஒரு லிட்டர் சானிடைசர் 320ரூ என்ற அளவில் உள்ளது.இது தற்போதுள்ள மார்கெட் விலையில் பாதி மட்டுமே என அவர்கள் கூறியுள்ளனர்.

ஒரு நாளைக்கு 100 லிட்டர்கள் வரை தயார் செய்யலாம் என்கின்றனர் இந்த தம்பதியினர்.”லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை” என்பதின் கீழ் தற்போது வீரர்களுக்கு மட்டுமே வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.