
உயிரிழந்த பயங்கரவாதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்படாத காரணத்தால் காஷ்மீர் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வரும் பயங்கரவாத கும்பல்கள் அரசு நிர்வாகம் மீது மிகுந்த கோபம் மற்றும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
சமீபத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் இருவரின் உடல்களும் அடையாளம் தெரியாத இடத்தில் ராணுவ வீரர்களால் புதைக்கப்பட்டன.
தற்போது ஒரு நபர் தனது வழக்கறிஞர்களுடன் வந்து இறந்தவர்களில் ஒருவன் தனது சகோதரன் என்றும் சண்டை நடந்த சமயத்தில் தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் தற்போது தனது சகோதரனுடைய உடல் வேண்டுமென ராணுவத்திடம் முறையிட்டுள்ளான்.
ராணுவம் தரப்பில் தற்போது உடல்கள் ஒப்படைக்கப்பட்டால் இறுதி சடங்கில் பங்கேற்க மக்கள் கூடுவர், தற்போது கொரோனா தொற்று உள்ள நிலையில் இது சரியானதாக இருக்காது என்கின்றனர்.
மேலும் நிதீமன்றங்கள் இதில் தலையிட்டு எப்படியும் உடலை ஒப்படைக்க உத்தரவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராணுவம் தற்போது எடுத்துள்ள முடிவு நிரந்தரமானதாக இருத்தல் வேண்டும், நாட்டிற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் நபர்கள் வீழ்த்தப்பட்டால் எக்காரணம் கொண்டும் அவர்களின் உடல் ஒப்படைக்கபட கூடாது என்பது எமது கருத்து