காஷ்மீருக்கு அவசர விசிட் அடித்த இராணுவ தளபதி; எதற்குமே தயாராக இருக்க வீரர்களுக்கு வலியுறுத்தல்

  • Tamil Defense
  • April 17, 2020
  • Comments Off on காஷ்மீருக்கு அவசர விசிட் அடித்த இராணுவ தளபதி; எதற்குமே தயாராக இருக்க வீரர்களுக்கு வலியுறுத்தல்

கடந்த வியாழன் அன்று காஷ்மீர் சென்ற இராணுவ தளபதி நரவனே அங்கு பணியில் இருந்த இராணுவ வீரர்களை சந்தித்து பேசினார்.வருகின்ற அனைத்து வித சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

இராணுவ தளபதியுடன் வடக்கு கட்டளைய கமாண்டர் லெப் ஜென் ஜோசி மற்றும் சினார் கார்ப்ஸ் கமாண்டர் லெப் ஜென் ராஜு ஆகியோரும் படைப்பிரிவுகளை பார்வையிட்டனர்.

காஷ்மீரில் அமைதி மற்றும் பாதுகாப்பு பணிகளில் சிறப்புடன் பணியாற்றிய வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.மேலும் வீரர்கள் கொரானா வைரஸ் எதிர்ப்பு பணியில் வீரர்கள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

அதன் பிறகு 92வது தள மருத்துவமனையையும் பார்வையிட்டார் தளபதி.அதன் பிறகு பதாமி பாக் கன்டோன்மன்டில் வைத்து தளபதிக்கு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து சினார் கார்ப்ஸ் கமாண்டர் விளக்கினார்.