
இன்று காலை இந்திய ராணுவம் தனது பிரங்கிகள் மூலம் எல்லைக்கு அப்பால் இருக்கும் சில பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது.
கேரன் செக்டாரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவமும் கடும் பதிலடி கொடுத்தது.
இந்த தாக்குதலால் ஒரு பயங்கரவாத முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டு உள்ளது
இந்த கடும் தாக்குதல்களால் எல்லையோரம் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த தாக்குதலில் அதிநவீன எக்ஸ்காலிபர் ஷெல்கள் பயன்படுத்த பட்டதாக தெரிகிறது.