
நாடு முழுதும் கொரானா தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் அவற்றை தடுக்க இந்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாடு முழுதும் விமானப்படை உதவியுடன் மெடிக்கல் சப்ளைகளை அனுப்பி வருகிறது.மாத்திரை மருந்துகள்,முகமூடிகள்,சுயபாதுகாப்பு உபகரணங்கள் என பல்வேறு மெடிக்கல் தளவாடங்களை விமானப்படை உதவியுடன் அனுப்பி வருகிறது.
இன்றும் விமானப்படை உதவியுடன் பல்வேறு பகுதிகளுக்கு மெடிக்கல் சப்ளை அனுப்பப்பட்டன.
காஷ்மீர் ,லடாக், குவகாத்தி,திமாபூர்,இம்பால்,திருவனந்தபுரம், தஞ்சாவூர்,சூலூர் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மெடிக்கல் சப்ளைகள் அனுப்பப்பட்டது.