ரஷ்ய என்ஜின்களை நிராகரித்த இந்திய விமானப்படை !!

  • Tamil Defense
  • April 2, 2020
  • Comments Off on ரஷ்ய என்ஜின்களை நிராகரித்த இந்திய விமானப்படை !!

இந்திய விமானப்படை தனது 272 சுகோய்30 விமானங்களை சுப்பர் சுகோய் ரகத்திற்கு தரம் உயர்த்தி மேம்படுத்த உள்ளது. இதற்கு ரஷ்யா “ஏ.எல் 41எஃப் 1எஸ்” (AL 41F 1S) என்ஜின்களை தர தயார் என அறிவித்தது ஆனால் இந்திய விமானப்படை இந்த என்ஜின்களை நிராகரித்து உள்ளது.

இந்த நவீனபடுத்தப்படும் விமானங்களில் எந்த புதிய என்ஜினும் பொருத்தப்படாது மாறாக சுகோய்57 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் ரேடாருக்கு இணையான ஏசா ரேடார் இதில் இணைக்கப்படும், மேலும் சுகோய்35 மற்றும் சுகோய்57 விமானங்களில் பயன்படுத்தப்படும் மேம்படுத்தப்பட்ட ஏவியானிக்ஸ் மற்றும் மின்னனு போர்முறை தொழில்நுட்பம் ஆகியவை பொருத்தப்படும் என இந்திய விமானப்படை வட்டார தகவல் கூறுகின்றன.

சமீபத்தில் HAL நிறுவனத்தின் நாசிக் தொழிற்சாலை இந்திய விமானப்படைக்கான 222 சுகோய்30 எம்.கே.ஐ விமானங்களின் தயாரிப்பை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.