கொரானா சோதனை மாதிரிகளை  எடுத்துச் சென்ற வானூர்தி விபத்து
1 min read

கொரானா சோதனை மாதிரிகளை எடுத்துச் சென்ற வானூர்தி விபத்து

லடாக்கிலிருந்து கோவிட் -19 சோதனைக்கான மாதிரிகளை ஏந்தி சண்டிகர் செல்லும் வழியில் இந்திய விமானப்படையின் (ஐ.ஏ.எஃப்) ஒரு சீட்டா ஹெலிகாப்டர் உபியில் உள்ள கிழக்கு புற அதிவேக நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறங்கியுள்ளது.

காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான நிலையத்திலிருந்து காலையில் கிளம்பிய இந்த வானூர்தி அவசரமாக தரையிரக்கப்பட்டது.இதில் யாரும் காயமடையவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் மூலம் ஐ.ஏ.எஃப் விமானிகள் ஒவ்வொரு நாளும் லடாக் மலைப்பகுதிக்கு இருந்து சந்தேகத்திற்குரிய கோவிட் -19 நோயாளிகளிடமிருந்து மாதிரிகளை சோதனைக்காக டெல்லி அல்லது சண்டிகர் கொண்டு வருவதை வெளியுலகுக்கு காட்டியுள்ளது.

லடாக் பிராந்திய பகுதியில் சோதனைகள் செய்ய தற்போது எந்த சோதனை கூடமும் இல்லை.

இதுவரை விமானப்படை லடாக்கில் இருந்து மாதிரிகள் கொண்டுவர நான்கு விமானங்களை களமிறக்கியுள்ளது.விமானப்படையின் ஐஎல் 76, ஏஎன் 32, சி17 ,டோர்னியர் விமானங்களோடு வானூர்திகளும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றன.