விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மேம்பாட்டு ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • April 9, 2020
  • Comments Off on விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மேம்பாட்டு ஒப்பந்தம் !!

இந்தியா முன்பு சோவியத் ஒன்றியத்திடம் இருந்து வாங்கிய ZU-23 விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை தற்போது மேம்படுத்த விரும்புகிறது.

இதற்கான ஒப்பந்தத்தை லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனம் வென்றுள்ளது. இதன்படி இந்த துப்பாக்கி நவீனமயமாக்கப்பட்டு தானியங்கி முறையில் இயங்கும் வகையில் மேம்படுத்த படும்.

மேலும் நவீன மின்னனு சாதனங்கள் இணைக்கப்பட்டு, எக்கால சூழலிலும் இயங்கும் வகையிலும், எளிதில் பராமரிக்க வசதியாகவும் மறுசீரமைப்பு செய்யப்படும்.

இந்த ஒப்பந்தம் 400 முதல் 1000 கோடிகளுக்கு இடையிலான மதிப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.