சுமார் 155மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்திய அமெரிக்க ஒப்பந்தம் !!

அமெரிக்க அரசு திங்கட்கிழமை அன்று இந்தகயாவிற்கு 155மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பது குறித்து அறிவிக்கை அனுப்பியுள்ளது.

இதன்படி பத்து AGM 84L Harpoon ஏவுகணைகள் 92மில்லியன் டாலர்கள் மதிப்பிலும், பதினாறு மார்க் 54எல் பல்திறன் இலகுரக நீரடிகணைகள் மற்றும் மூன்று மார்க்54 பயிற்சி நீரடிகணைகள் சுமார் 63மில்லியன் டாலர்கள் மதிப்பிலும் வாங்கப்பட உள்ளது.

இந்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

ஹார்ப்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் நமது பி8 விமானங்களில் பொருத்தப்படும் இதன் மூலம் எதிரி கப்பல்களை வானிலிருந்து தாக்க முடியும்.

மேலும் மார்க்54 நீரடிகணைகளால் பமது நீர்மூழ்கி எதிர்ப்பு திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹார்ப்பூன் ஏவுகணைகள் போயிங் நிறுவனத்தாலும், மார்க்54 நீரடிகணைகள் ரேய்த்தியான் நிறுவனத்தாலும் தயாரிக்கப்படும் என்பது கூடுதல் தகவல்.