இந்தியா முதல்கட்டமாக சுமார் 1.4 கோடி ஹைட்ராக்ஸிக்ளொரொக்யின் மற்றும் பாராசிட்டமல் மாத்திரைகளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்ப உள்ளது. இதற்கான பட்டியலை மத்திய அரசு இறுதி செய்துள்ளது.
தற்போது வரை சுமார் 25 நாடுகளுக்கு இந்தியா இந்த மருந்துகளை அனுப்ப உள்ளது. முதல்கட்டமாக மருந்துகளை 13 நாடுகளுக்கு அனுப்ப உள்ளது, அந்த நாடுகளாவன; அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, டொமினிசியன் குடியரசு, பிரேசில், பஹ்ரைன், பூட்டான், நேபாளம், ஆஃப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளாகும்.
வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அளித்த தம்மு ரவி பேட்டியில் அண்டை நாடுகளுக்கு முதலுரிமை அளிக்கப்படும் எனவும், ஏற்கனவே பல நாடுகளிடமிருந்து கோரிக்கை வந்து உள்ளதாகவும் படிப்படியாக அனுப்பபடும் என்றார்.
இந்தியா சார்க் கூட்டமைப்பு நாடுகள், மொரிஷயஸ், செஷல்ஸ், ஆஃப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிடமிருந்து இதற்கான கோரிக்கை வந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது