கொரோனா தாக்கம் முடிவடைந்த பிறகு பாதுகாப்புக்கு செலவு செய்வதை விட சுகாதாரத்திற்கு அதிகம் செலவிட வேண்டும்- கமல்ஹாசன்

  • Tamil Defense
  • April 21, 2020
  • Comments Off on கொரோனா தாக்கம் முடிவடைந்த பிறகு பாதுகாப்புக்கு செலவு செய்வதை விட சுகாதாரத்திற்கு அதிகம் செலவிட வேண்டும்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மன்றத்தின் தலைவரான கமல்ஹாசன் அவர்கள் கொரானா தாக்கம் முடிவடைந்த பிறகு இந்தியா செய்ய வேண்டியவை என தான் கற்பனை செய்தவற்றை செய்திவெளியீடு செய்தார்.அதில் பாதுகாப்புக்கு செலவு செய்தலை விட சுகாதாரத்திற்கு அதிகமாக செலவிட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தியா தனது மொத்த ஜிடிபியில் 2% பாதுகாப்புக்காக செலவு செய்கிறது.ஆனால் சுகாதாரத்திற்கு 1% தான் செலவு செய்கிறது என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதற்கு நமது பக்கத்தின் சார்பாக பதிலளிக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவு எழுதுகிறேன்.நல்ல விசயம் தான்.பாதுகாப்புக்கு செலவு செய்யும் தொகையை விட அதிகமாக சுகாதாரத்துறைக்கு செலவு செய்யலாம்.ஆனால் எக்காரணம் கொண்டும் பாதுகாப்புக்கு தற்போது செலவு செய்யப்படும் நிதி குறைவோ தடையோ ஏற்பட்டுவிடக்கூடாது.

ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையால் முப்படைகளும் தங்களின் நவீனப்படுத்தும் திட்டத்தை நகர்த்தி செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.இன்று நவீனமாக உள்ளது நாளையும் நவீனமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.தினமும் புதிய தொழில்நுட்பங்கள் வந்த வண்ணம் உள்ளன.அவற்றிற்கு நாமும் ஈடு கொடுத்து புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்தல் வேண்டும்.சம்பளம்,ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு பணம் செலுத்துதல்,நவீனப்படுத்தல்,புதிய தளவாடங்கள் வாங்குதல்,தொழில்நுட்பங்களில் முதலீடு என முப்படைகளுக்கு ஏராளமான பணிகள் உள்ளன.

சுகாதாரத்திற்கு அதிக தொகை அரசு செலவு செய்யலாம்.ஆனால் பாதுகாப்பிற்காக தற்போது வழங்கப்படும் நிதி பற்றாக்குறை தான்.அதை மேலும் குறைக்காமல் இருந்தால் நலம்.