பிரிட்டனுக்கு பாராசிட்டமால் மாத்திரைகளை அனுப்பியுள்ள இந்தியா

  • Tamil Defense
  • April 19, 2020
  • Comments Off on பிரிட்டனுக்கு பாராசிட்டமால் மாத்திரைகளை அனுப்பியுள்ள இந்தியா

இந்தியா இங்கிலாந்துக்கு அனுப்பிய பாராசிட்டமால் பாக்கெட்டுகள் விரைவில் பிரிட்டிஷ் சந்தைகளில் களமிறக்கப்பட உள்ளது.

COVID-19 ஐ சமாளிக்க இந்தியா பல நாடுகளுக்கு மருந்துகளை அனுப்புகிறது, ஏறக்குறைய 55 நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை அனுப்பியுள்ளது இந்தியா.

“2.8m பாராசிட்டமால் பாக்கெட்டுகளை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்தமைக்கு இந்திய அரசுக்கு நன்றி. இந்த மருந்து இங்கிலாந்தின் முன்னணி பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் ” என பிரிட்டிஷ் தூதரக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர் “கொரோனா வைரஸ் என்பது நாம் அனைவரும் பல தசாப்தங்களாக எதிர்கொண்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும், எனவே உலகளாவிய வர்த்தகத்தைத் தொடரவும் விநியோகச் சங்கிலிகளைத் திறந்து வைத்து நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். தொடர்ந்து வேலை செய்ய நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என பேசியுள்ளார்.

COVID நெருக்கடிக்கு எதிராக போராட இரு நாடுகளும் பலதரப்பட்ட உலக அமைப்புகளின் கீழ் செயல்படுகின்றன.

மேலும் இந்தியாவில் தவித்து வந்த 3700 பிரிட்டிஷ் நாட்டவர்களையும் இந்தியா பத்திரமாக திருப்பி அனுப்பியுள்ளது.இன்னும் நிறைய பிரிட்டன் நாட்டவர்கள் இந்தியாவில் உள்ளனர்.

இந்திய மாடல் போலவே நாங்களும் ஊரடங்கு தடை விதித்து கோவிட் 19ஐ முடக்க முயற்சித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.

இதுவரை கோவிட் 19 தாக்குதலால் 15000 மக்கள் அங்கு உயிரிழந்துள்ளனர்.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.