
இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை தனது 7 முதல் 8 கப்பல்களை அனுப்பி உள்ளதாகவும் இதனால் இந்தியா சீனா இடையேயான மோதல் நிகழும் சாத்திய கூறுகள் உள்ளதாக இந்திய கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு கடற்படை கட்டளையகத்தில் இருந்து இயங்கி வரும் கடற்படை விமான படையனி 311 டோர்னியர் விமானங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் அந்த அதிகாரி கூறும்போது அனைத்து வானூர்திகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளது எனவும், தேவைப்பட்டால் அவற்றை அனுப்பவோம் என்றார்.
சமீபத்தில் தென் சீன கடலில் ஜப்பானுடைய மியாகோ தீவின் மிக அருகாமையில் சீன கடற்படை தனது விமானந்தாங்கி கப்பலை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.