
ஏற்கனவே ஆப்கனுக்கான இந்திய தூதர் வினய் குமார் ஆப்கனுக்கு 75000 மெட்ரிக் டன்கள் கோதுமை இலவசமாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.
அதன் படி முதல் தொகுதியாக 5,022 மெட்ரிக் டன்கள் அனுப்பப்பட்டுள்ளன.இருநாட்டு உறவுகளை தாண்டியும் கொரானாவால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு உணவு பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் இந்த உதவியை செய்துள்ளது இந்தியா
இது தவிர ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இலவசமாக அனுப்ப முடிவு செய்துள்ளது இந்தியா.அதாவது 5 லட்சம் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஆப்கனுக்கு வழங்கவும் முடிவு செய்துள்ளது.
தற்போது ஆப்கனில் 607 பேர் கொரானா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.18 பேர் உயிரிழந்துள்ளனர்.