அண்டை நாடுகளுக்கு அனுப்ப ராணுவ மருத்துவர்களை தயார் செய்யும் தரைப்படை !!

  • Tamil Defense
  • April 22, 2020
  • Comments Off on அண்டை நாடுகளுக்கு அனுப்ப ராணுவ மருத்துவர்களை தயார் செய்யும் தரைப்படை !!

ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு உதவ மருத்துவர்களை தயார்நிலையில் இருக்க தரைப்படை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மாதம் மாலத்தீவுகளுக்கு 14 பேர் கொண்ட ராணுவ மருத்துவ குழுவும் இந்த மாதம் குவைத் நாட்டிற்கு 15 பேர் கொண்ட ராணுவ மருத்துவ குழு அனுப்பபட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவ குழுக்கள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் சென்று அந்நாட்டு மருதாதுவர்களுக்கு பயிற்சி அளிப்பது, ஆய்வகங்களை அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வர்.

மேலும் இந்தியா 55நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிக்ளொரோக்யின் மாத்திரைகளை அனுப்பி வருகிறது. இதில் அமெரிக்கா, செஷல்ஸ் மற்றும் மொரிஷயஸ் உள்ளிட்ட நாடுகள் இந்த மருந்தை பெற்று விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.