வழிகாட்டும் அமைப்பில் தவறுகளை தடுக்க இந்தியாவின் கண்டுபிடிப்பு !!
1 min read

வழிகாட்டும் அமைப்பில் தவறுகளை தடுக்க இந்தியாவின் கண்டுபிடிப்பு !!

பூமியின் ஐயனோஸ்பீயரில் உள்ள எலக்ட்ரான் அடர்த்தியானது, துல்லியமாக வழிகாட்டாமல் வழிகாட்டி அமைப்புகளில் தவறை ஏற்படுத்துகிறது.

இந்திய புவிகாந்த கல்லூரியின் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர். இதன்படி ஐயனோஸ்பீயரில் உள்ள எலக்ட்ரான்களின் அடர்த்தியை துல்லியமாக கணித்து ஜி.பி.எஸ்/ ஜி.என்.எஸ்.எஸ் அமைப்புகளில் தவறு ஏற்படாமல் தடுக்க முடியும்.

சிறப்பான ஐயனோஸ்பீயர் சர்வே செயற்கைகோள் அடிப்படையிலான வழிகாட்டி அமைப்புகளில் சிறப்பான துல்லியத்தை வழங்கும். தற்போதுள்ள ஐயனோஸ்பீயர் தரவுகளை விட இது துல்லியமானது என்கிறார் இந்த புவிகாந்த கல்லூரியின் முனைவர். எஸ். துளிசிராம்.

இந்த அமைப்பிற்கு “ஆர்ட்டிஃபிஷியல் நியுரல் நெட்வொர்க் பேஸ்டு க்ளோபல் ஐயனோஸ்பெரிக் மாடல்” என பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 46 – 621 மைல்கள் உயரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் நீண்ட காலத்திற்கு எலக்ட்ரான் தரவுகளை இந்த அமைப்பு ஆராயும்.

இதனை அனைத்து வழிகாட்டி, இடம்காட்டி மற்றும் விமான அமைப்புகளிலும் பயன்படுத்த முடியும். மேலும் வருங்காலத்தில் ராணுவத்தின் துல்லிய தாக்குதல் திறன்களை இது பன்மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.