இந்திய கட்றபடை தனது பி8 விமானங்களில் வானிலிருந்து ஏவப்படும் ஹார்ப்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் மார்க்54 நீரடிகணைகளை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது.
இவற்றுடன் வானிலிருந்து ஏவும் வகையிலான தொலைதூர நில தாக்குதல் க்ருஸ் ஏவுகணைகளை (LRLACM – Long Range Land Attack Cruise Missile) பொருத்த நினைக்கிறது, இது நமது சொந்த தயாரிப்பான நிர்பய் க்ருஸ் ஏவுகணைகளை அடிப்படையாக கொண்டது.
தற்போது ADE – Aeronautical Development Establishment வானிலிருந்து ஏவும் வகையிலான LRLACM ஏவுகணையை கடல்பரப்பிற்கு சிறிது மேலே பறக்கும் வகையில் விமானப்படை மற்றும் கடற்படைக்காக தயாரித்து வருகிறது.
இவற்றை பி8 விமானங்களின் Internal Weapons Bayல் வைத்து கொண்டு செல்ல முடியாது ஆகையால் விமானத்தின் ஹார்ப்பூன் ஏவுகணைகளை கொண்டு செல்ல பயன்படும் Hardpointகளில் இவற்றை பொருத்தி கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.