
சமீப காலமாக நடைபெற்று வரும் சில நிகழ்வுகள் இந்திய பாகிஸ்தான் உறவை மிக மோசமான நிலைக்கு நகர்த்தி உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர், மேலும் வரும் காலங்களில் இதன் பாதிப்பு எதிர்பாராத சில விஷயங்களை கொண்டு வரலாம் எனவும் கூறுகின்றனர்.
கடந்த மாதம் ஆஃப்கன் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா தாக்குதல், இந்திய தூதரகத்தை தாக்க திட்டம் என ஐ.எஸ் இயக்கம் செயல்படுகிறது.
எல்லையோரம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல்கள் , பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க முயற்சி என பாகிஸ்தான் ராணுவம் செயல்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் கேரன் செக்டாரில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் 5 பாரா சிறப்பு படையினரின் உயிரிழப்பு என அடுத்தடுத்த நிகழ்வுகள் இந்தியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவை அனைத்தின் பின்னால் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உள்ளதால் வரும் காலங்களில் இந்திய பாகிஸ்தான் உறவு மோசமாக இருக்கும் என கூறப்படுகிறது.