Breaking News

ஏன் இந்தியாவின் (NUCLEAR TRIAD) மூம்முனை அணுஆயத திறன் ஆபத்தானது ??

  • Tamil Defense
  • April 11, 2020
  • Comments Off on ஏன் இந்தியாவின் (NUCLEAR TRIAD) மூம்முனை அணுஆயத திறன் ஆபத்தானது ??

இந்தியா உலகில் அணு ஆயுதம் வைத்திருக்கும் மிக சக்தி வாயந்த நாடுகளில் ஒன்றாகும். அதுவும் மூம்முனை அணு ஆயுத தாக்குதல் திறன் கொண்ட 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்று, ஆரம்பத்தில் நிலத்தில் இருந்து ஏவப்படும் அணு ஆயதங்களை மட்டுமே வைத்திருந்த இந்தியா காலப்போக்கில் உலக நடப்புகளுக்கும் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளை தள்ளி வைக்கும் வகையிலும் மூம்முனை அணு ஆயத திறனை வளர்த்து கொண்டது.

என்ன தான் இந்தியா அணு ஆயுதங்களை வைத்திருந்தாலும் (NO FIRST USE POLICY) முதலில் பிரயோகிக்க மாட்டோம் ஆனால் அணு ஆயுதத்தால் தாக்கப்பட்டால் அணு ஆயுத பிரயோகம் செய்வோம் எனும் கொள்கையை இந்தியா பின்பற்றி வந்தது. சீனாவும் இந்த கொள்கையை பின்பற்றும் நாடு எனினும் உஷாராக இருப்பது நல்லது.

அதே நேரத்தில் அமெரிக்கா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இத்தகைய கொள்கையை பின்பற்ற வில்லை, அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அவ்வப்போது அணு ஆயுத மிரட்டல்களை விடுத்து வருகிறது.

ஆனால் கடந்த வருடம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது இதுநாள் வரை முதலில் அணு ஆயுத பிரயோகம் செய்யமாட்டோம் எனும் கொள்கையை உறுதியுடன் பின்பற்றி வந்தோம் ஆனால் எதிர்காலங்களில் உள்ள சூழ்நிலையை பொறுத்தே முடிவுகள் அமையும் என்றார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவின் மூம்முனை அணு ஆயுத திறன் பற்றி காணலாம்.

வான்வழி:
இந்திய விமானப்படையின் ஜாகுவார், மிராஜ்2000, சுகோய்30 மற்றும் இனி வரவிருக்கும் ரஃபேல் போர் விமானங்கள் மூலமாக அணு ஆயத பிரயோகம் செய்ய முடியும்.

நிலம்:

இந்தியா தனது நிலத்திலிருந்து தாக்கும் அணு ஆயுத அமைப்புகளை மேம்படுத்தி அதன் திறன்களை பன்மடங்கு அதிகரித்து உள்ளது.

இந்தியாவின் அக்னி ஏவுகணைகள் குடும்பம் மிக வலிமையான அணு ஆயுத தாக்குதல் அமைப்புகளாகும். இவற்றின் மூலம் ஒட்டுமொத்த சீனா பாகிஸ்தான் மத்திய ஆசியா , கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள் , மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் இந்தியாவின் தாக்குதல் வரம்புக்குள் வருகின்றன.

கடல்வழி:
இந்தியா அரிஹந்த் ரக நீர்மூழ்கிகள் மூலமாக அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. இதற்காக கே குடும்பத்தை சார்ந்த ஏவுகணைகள் உள்ளன.

இந்த குடும்பத்தில் கே15, கே4, கே5 மற்றும் கே6 ஆகிய ஏவுகணைகள் உள்ளன.
இதில் கே15 1500கிமீ தாக்குதல் வரம்பு கொண்டது தற்போது தயாரிப்பு நிலையில் உள்ளது. கே4 3500கிமீ தாக்குதல் வரம்பு கொண்டது சோதனைகள் முடிந்து பணையில் இணைய உள்ளது. கே5 5000கிமீ தாக்குதல் வரம்பு கொண்டது தற்போது வடிவமைப்பில் உள்ளது.
கே6 6000கிமீ தாக்குதல் வரம்பு கொண்டது, இதுவும் வடிவமைப்பு நிலையில் உள்ளது.

ஆக மொத்தத்தில் இந்தியா வான் நில நீர் ஏவுகணைகள், குண்டுகள் என அணு ஆயுத பிரயோகம் செய்ய பல்வேறு வகையான ஆயுத அமைப்புகளை கொண்டுள்ளது. இது இந்தியாவின் எதிரிகளை நிச்சயமாக யோசிக்க வைக்கும் அளவுக்கு ஆபத்தானது என்பதில் ஐயமில்லை.