மேலும் மூன்று நாடுகளுக்கு ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை அனுப்ப இந்தியா அனுமதி அளித்துள்ளது.அமெரிக்கா,ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோரானா போரில் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கும் என அமெரிக்கா கூறிவருவதை அடுத்த இந்த மருந்துகளுக்கான தேவை அதிகரித்தது.இந்தியா தான் உலகிலேயே இந்த மாத்திரைகளை அதிக அளவு உற்பத்தி செய்கிறது.
இந்த மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்ததற்காக அமெரிக்க அதிபரும் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் தனது நன்றியை பதிவு செய்தார்.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா வெளிவிகராகத்துறை அமைச்சர் மற்றும் ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருடன் கொரானா தடுப்பு மற்றும் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகள் குறித்தும் பேச்சு நடத்தினார்.ஸ்பெயின் இரு மாதங்களுக்கு முன்பே ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை ஆர்டர் செய்திருந்தது.
மலேசியா மற்றும் கல்ப் உட்பட இதுவரை 30 நாடுகள் இந்தியாவிடம் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை எதிர்பார்த்து உள்ளனர்.