மலேசியாவிற்கு ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை அனுப்ப உள்ள இந்தியா

  • Tamil Defense
  • April 29, 2020
  • Comments Off on மலேசியாவிற்கு ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை அனுப்ப உள்ள இந்தியா

ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை மலேசியாவிற்கு அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கோவிட்-19ஐ எதிர்த்து போராட ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை அனுப்புமாறு மலேசியா இந்தியாவை ஏற்கனவே கேட்டிருந்தது.

இதுவரை இந்தியா ஐந்து மில்லியன் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளது.தவிர 1.32 மில்லியன் பாரசிட்டமால் மருந்துகளையும் இந்தியா உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளது.