கோவிட் -19 வைரசிற்கு காரணம் சீனா தான் என கண்டறியப்பட்டால்… சீனாவை எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதற்கு சீனா தான் காரணம் என்றால் அதன் விளைவுகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோயை (கோவிட் -19) சீனா கையாண்டது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய டிரம்ப், இந்த பிரச்சினையில் அமெரிக்காவுடன் வெளிப்படைத்தன்மை இல்லாமல் மற்றும் ஆரம்பத்தில் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்..
சனிக்கிழமையன்று ஒரு வெள்ளை மாளிகையின் செய்தி மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவர்கள் தெரிந்தே பொறுப்பாளர்களாக இருந்தால், பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்” என கூறியுள்ளார்.
கொடிய கோவிட் -19 உலகை வீழ்த்தும் வரை சீனாவுடனான தனது உறவு மிகவும் நன்றாக இருந்தது என்று டிரம்ப் கூறினார்.
தெரியாமல் தவறு செய்வதற்கும் தெரிந்தே செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த கொரானா வைரஸ் அனைவரையுமே சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது என கூறியுள்ளார்.உலகிலேயே சிறந்த பொருளாதார பலம் கொண்ட நாடாக இருந்தோம்.சீனா எங்கள் அருகே கூட வரமுடியாமல் இருந்தது என பேசியுள்ளார் ட்ரம்ப்.