பஞ்சாபில் ஹிஸ்புல் பயங்கரவாதி கைது !!

  • Tamil Defense
  • April 27, 2020
  • Comments Off on பஞ்சாபில் ஹிஸ்புல் பயங்கரவாதி கைது !!

பஞ்சாப் மாநில காவல்துறை சுமார் 29லட்சம் ருபாய் சகிதம் ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாதியை கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் காவல்துறை தலைவர் இதுகுறித்து அளித்த பேட்டியில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட நவ்காம் பகுதியை சேர்ந்த அப்துல் சமாத் வகாய் என்பவரின் மகன் ஹிலால் அஹமது வகாய் எனும் ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.

இவனை ஜம்மு காஷ்மீர் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்க தலைவன் ரியாஸ் நாய்க்கூ ஒரு அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் இருந்து பணம் பெறுவதற்காக பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸில் உள்ள மெட்ரோ மார்ட்டிற்கு அனுப்பியுள்ளான.

அந்த அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து பணம் பெற்ற பின்னர் இவன் கைது செய்யப்பட்டு உள்ளான். மேலும் காவல்துறை அந்த நபரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இவன்மீது சட்டவிரோத செயல்கள் சட்டத்தின் 10,11,13,17,18,20,21 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியபட்டுள்ளது.