மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வீரவரலாறு

  • Tamil Defense
  • April 12, 2020
  • Comments Off on மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வீரவரலாறு

பசுமை போர்த்திய கேரளாவின் கோழிக்கோட்டில் 12 ஏப்ரல் 1983 அன்று ராகவாச்சாரி மற்றும் கீதா தம்பதியரின் மகனாய் உதித்தார்.வணிகவியலில் இளங்கலைப் பட்டமும் ,மெட்ராஸ் கிறித்தவக் கல்லூரியில் பத்திரிக்கை துறையில் பட்டமும் பெற்றார்.அவரது தாத்தா மற்றும் இரண்டு மாமா இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் என்பதால் அவர் இராணுவத்தில் இணைய ஆர்வம் கொண்டார்.

அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பின்பு 2006ல் 22வது இராஜ்புத் பிரிவில் லெப்டினன்டாக படையில் இணைந்தார்.தனது நீண்டகால தோழியான இந்து ரிபேக்கா அவர்களை 28 ஆகஸ்டு 2009ல் கரம் பிடித்தார்.அவர்களுக்கு 11 மார்ச் 2011ல் அஷ்ரேயா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இன்பான்ட்ரி பள்ளியிலும் ,ஐநா அமைதிப் படை சார்பாக லெபனானிலும் பணிபுரிந்தார்.2012 டிசம்பரில் 44 இராஷ்டீரிய ரைபிள்ஸ் வாயிலாக காஷ்மீரின் சோபியான் மாவட்டத்திற்கு பயங்கரவாதிகளை வேட்டையாட கிளம்பிச் சென்றார்.

25 ஏப்ரல் 2014, தனது குழுவிற்கு தலைமையேற்று பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக சென்றார்.எதிர்பாராதவிதமாக அவரது வீரர்கள் குழு கடும் தாக்குலுக்கு உள்ளானது.நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மேஜர் பதிலடி கொடுக்க தயாரானார்.இருபுறமும் பயங்கர துப்பாக்கிச்சூடு நீடிக்க மேஜர் வெகுவிரைவாகவே நேரடியான யுத்தத்தில் ஒரு பயங்கரவாதியை வீழ்த்தினார்.இதில் அவர் படுகாயமடைந்தார்.ஆனால் விட்டுவிடவில்லை.ஊர்ந்தே சென்று இரண்டாவது பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தினார்.படுகாயமடைந்த போதும் தனது வீரர்களை வழிநடத்தினார்.அந்த நடவடிக்கையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.அந்த மூன்று பயங்கரவாதிகளும் 24மணி நேரத்திற்கு முன்பு ஒரு தேர்தல் அதிகாரியை கொன்றிருந்தனர்.இந்த துப்பாக்கி சூட்டில் மேஜர் படுகாயம் அடைந்த மேஜர் பின் வீரமரணந்தை தழுவினார்.

போரில் வீரமுடன் செயல்பட்டது,சக வீரர்களுக்கு துணையாக நின்றது,பயமறியா செயல்பாடு காரணமாக இந்தியாவின் மிகஉயரிய இராணுவ விருதான அசோக சக்ரா பெற்றார்.அதை அவர் மனைவி பெற்றுக்கொண்டார்.

வீரவணக்கம்