சுகாய் விமானத்தயாரிப்பை நிறுத்த உள்ள ஹால் நிறுவனம்;அடுத்து என்ன ?

  • Tamil Defense
  • April 1, 2020
  • Comments Off on சுகாய் விமானத்தயாரிப்பை நிறுத்த உள்ள ஹால் நிறுவனம்;அடுத்து என்ன ?

272 சுகோய்30 போர் விமானங்களின் தயாரிப்பை முடித்தது HAL !!

இந்திய விமானப்படை HAL நிறுவனத்திடமிருந்து 272 சுகோய்30 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது தற்போது அந்த 272 விமானங்களும் தயாரிக்கப்பட்டு விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நாசிக் நகரத்தில் உள்ள தொழிற்சாலையில் தான் இந்த விமானங்கள் நிர்மாணம் செய்யப்பட்டன, தற்போது இந்த தொழிற்சாலையை உயிர்ப்புடன் வைக்க மேலதிக விமானங்களுக்கான ஒப்பந்தத்தை எதிர்பார்ப்பதாக HAL நிர்வாகம் கூறுகிறது.

விமானப்படை தளபதி பதவ்ரியா கடந்த ஆண்டு இது பற்றி கூறும்போது “தற்போதைய நிலையில் நாங்கள் 12 சுகோய் விமானங்களை வாங்க திட்டமிட்டு உள்ளோம் , எதிர்காலத்தில் பழைய விமானங்களை ஒதுக்கும் போது மேலதிக விமானங்களை வாங்க வாய்ப்புகள் உண்டு என்றார் மேலும் அவர் கூறுகையில் சுகோய் விமானங்களை மென்மேலும் நவீனபடுத்துவது பற்றி திட்டமிட்டு வருவதாகவும் கூறினார்.

HAL இந்திய விமானப்படைக்கு சுமார் 72 சுகோய்30 விமானங்களை 5பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் நிர்மாணித்து தர தயார் என அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

HAL தலைமை மேலாண்மை அதிகாரி ஆர். மாதவன் கூறும்போது மேலதிக சுகோய் விமானங்கள் மற்றும் 83 தேஜாஸ் இலகுரக போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை எதிர்நோக்கி உள்ளதாகவும் அனேகமாக அடுத்த நிதியாண்டில் (2020-21) கையெழுத்து நிகழ்வு நடக்கலாம் என்றும் கூறினார்.

தற்போதைய நிலையில் இந்திய விமானப்படையில் 275போர் விமானங்கள் பற்றாக்குறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.