Breaking News

மீண்டும் பணியை துவங்க உள்ள HAL !!

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வருகிற 20ஆம் தேதி முதல் தனது பணிகளை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கு மேல் பாதுகாப்பு துறை நிறுனங்கள் செயல்படாமல் இருந்தால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தின் தயார்நிலை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதை கருதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் ஏப்ரல்20 முதல் மே3 வரையிலான காலகட்டத்தில் மூன்று ஷிப்ட்களாக பணி நடைபெறும் எனவும், ஒவ்வொரு ஷிப்ட்டும் 5 மணி நேரம் இருக்கும் எனவும், ஒவ்வொரு ஷிப்ட்டின் இடையே அரை மணி நேர இடைவெளை உண்டு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணியாளர்களுக்கு நிறுவன வளாகத்தில் உணவு வழங்கப்படாது எனவும், தங்கள் சொந்த வாகனத்தை போக்குவரத்திற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூர பணியாளர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையை சேர்ந்த ஊழியர் பணிக்கு செல்ல வேண்டியதில்லை ஆனால் பெங்களுரில் நிறுவனம் உள்ளதால் பெங்களுரில் வசிக்கும் அனைத்து ஊழியர்களும் நிச்சயமாக பணிக்கு செல்ல வேண்டியதாகிறது.

நிறுவன வளாகத்தில் கொரோனா தொடர்பான அனைத்து சுகாதார விதிமுறைகள் அமல்படுத்தப்படும் எனவும் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.