
சீனாவின் கடல் பகுதியில் பராசெல் தீவுகளுக்கு மிக அருகே வந்ததாக அமெரிக்க கடற்படையின் ஏவுகணை நாசகாரி கப்பல் யு.எஸ்.எஸ். பேர்ரி எனும் கப்பலை சீன கடற்படை அதன் எல்லையில் இருந்து விரட்டியடித்துள்ளது.
இத்தகைய சம்பவம் முதன் முதலில் சீன வரலாற்றில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுகுறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்கா பிற நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை விட தற்போது கொரோனாவை தனது நாட்டில் ஒழிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்” என தெரிவித்துள்ளது.