ஃபிரெஞ்சு கடற்படை இயக்கி வரும் ஒரே விமானந்தாங்கி கப்பல் சார்ல்ஸ் டி காவ்ல் ஆகும். இது அணுசக்தியால் இயங்கும் சுமார் 42,500 டன்கள் எடை கொண்ட ராட்சத கப்பலாகும். நமது விக்கிரமாதித்யாவை விட சற்று சிறிய கப்பல்.
இக்கப்பலில் 2100 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 50 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிஷன் ஃபாச் எனும் நடவடிக்கையில் அட்லாண்டிக் பெருங்கடலில் இயங்கி கொண்டிருந்த இக்கப்பலை உடனடியாக தெற்கு ஃபிரான்ஸில் உள்ள டுலான் கடற்படை தளத்திற்கு ஃபிரெஞ்சு கடற்படை நகர்த்த உத்தரவிட்டுள்ளது.
ஒற்றை குண்டு கூட சுடப்படாமல் மாபெரும் அமெரிக்கா மற்றுமஃபிரெஞ்சு விமானந்தாங்கி கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.