காஷ்மீரில் 4 பயங்கரவாதிகளை வீழ்த்தியது இராணுவம்

  • Tamil Defense
  • April 22, 2020
  • Comments Off on காஷ்மீரில் 4 பயங்கரவாதிகளை வீழ்த்தியது இராணுவம்

காஷ்மீரீல் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் 4 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீரின் சோபியானில் பயங்கரவாதிகள் குறித்து பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.எனவே நமது வீரர்கள் அந்த குறிப்பிட்ட இடத்தை சுற்றிவளைத்து தாக்க தொடங்கினர்.

ஆபரேசன் மேலஹூரா எனும் பெயரில் இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடங்கினர்.தற்போது வரை இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

ஆபரேசன் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இராணுவம் கூறியுள்ளது.