
காஷ்மீரில் இருவேறு ஆபரேசன்களில் நான்கு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.முன்னதாக காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற ஆபரேசனில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.முன்னதாக ராணுவத்திற்கு பயங்கவாதிகள் இருப்பு குறித்த இரகசிய தகவல்கள் கிடைத்தது.
இதனையடுத்து பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்து இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடங்கினர்.
ஆபரேசன் டியோர் என்னும் பெயரில் இராணுவம் தாக்குதலை தொடங்கியது.இந்த தாக்குதலில் முதலில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.தற்போது மேலும் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டதாக வடக்கு கட்டளையகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது கிஷ்த்வார் என்னுமிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.