சோகச் செய்தி; பயங்கரவாதி தாக்குதலில் நான்கு சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்
பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சோபோர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
நூர்பஹ் என்னுமிடத்தில் சிஆர்பிஎப் மற்றும் காவல்துறை குழு சென்றுகொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே இருந்த SDH மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ஆனால் அங்கு நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஒரே ஒரு பயங்கரவாதி தான் இந்த சம்பவத்தை செய்துள்ளான்.வீரர்களை நோக்கி கால்நடையாக வந்த அவனை வீரர்கள் நிறுத்தி கேள்வி கேட்பதற்கு முன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தாக்கியுள்ளான்.
புதிய பயங்கரவாத அமைப்பான “The Resistance Front” இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.